குரங்கணி மலையில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!Sponsoredதேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில், 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.

கடந்த மார்ச் மாதத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற குழுவினர் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து குரங்கணி மலைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குரங்கணி மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

Sponsored


Sponsored


இது தொடர்பாக நம்மிடம் பேசிய கொழுக்குமலையைச் சேர்ந்தவர்கள், “அந்த நாளையும், அந்த காட்டுத்தீயையும் எங்களால் மறக்கவே முடியாது. இன்று எல்லாமும் மாறி, மீண்டும் மலை தன்னை மீட்டுக்கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான், இன்று பூத்துள்ள குறிஞ்சி மலர்கள். காட்டுத்தீக்குப் பிறகு குரங்கணி வழியாக கொழுக்குமலை செல்ல தடை விதித்துள்ளது வனத்துறை. அதனால், மூணாறு, சூரியநெல்லி வழியாக கொழுக்குமலை வரலாம். இங்கிருந்து குறிஞ்சி மலர்களை ரசிக்க முடியும்” என்றனர்.Trending Articles

Sponsored