'ஏழு நாள்களுக்குள் வீடியோ பதிவை ஒப்படைக்கவேண்டும்' - அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவுSponsoredஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையிலில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் உயிரிழந்த நாள் வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஏழு நாள்களுக்குள் சமர்பிக்கவேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் பொறுப்பாசிரியர் ஆனந்தன் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர். அப்போது, சுப்பையா விஸ்வநாதனிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது.

Sponsored


மேலும், சி.சி.டி.வி காட்சிகளை பதிவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது யார் என்பது என்பது உள்ளிட்ட கேள்விகளையும் ஆணையம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அந்த விசாரணையையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதிலிருந்து உயிரிழந்தது வரையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சி.சி.டி.வி காட்சிகளையும் ஏழு நாட்களுக்குள் சமர்பிக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored