`தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது மிகப்பெரிய பாவம்' - பேரறிவாளன் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் விஜய் சேதுபதி!Sponsored25 வருடமாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறை தண்டனை  அனுபவித்து வருகின்றனர்  பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தார். ஆனால் விடுதலை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலைத் தொடர்பாக முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம்  உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார். இதன்மூலம் இவர்களின் விடுதலை குறித்த விவாதங்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. விரைவில் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறே ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் ``7 பேரை விடுதலை செய்யும் முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது" எனக் கூறி வருகின்றனர். 

Sponsored


மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அந்தவகையில் சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் ஹவுஸில் பிரபல புகைப்படக்கலைஞர் எல்.ராமச்சந்திரனின் புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்த நடிகர் விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களை சந்தித்து 7 பேரின் விடுதலைக் குறித்து பேசினார். அதில், ``25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அற்புதம்மாளிடம் அந்த குழந்தை சென்று சேர வேண்டும். தயவு செய்து அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அந்த அம்மாவினுடைய போராட்டம் என்பது பெரிய தவம். அந்த தவத்திற்காகவாவது அவர் வெளியே வரவேண்டும். ஒரு அம்மாகிட்ட இருந்து குழந்தையை பிரிக்கிறது மிகப்பெரிய பாவம். இத்தனை வருடம் அது நடந்துவிட்டது. பேரறிவாளன் அண்ணன் வெளியே வரவேண்டும். அவரோட அம்மா கூட சேர்ந்து வாழ வேண்டும். பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”  என்று கூறினார். 

Sponsored


முன்னதாக ஆர்டிகிள் 377க்கான உங்களது கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு விஜய் சேதுபதி " நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மேலும், இது தனிமனித சுதந்திரம் சார்ந்த ஒன்று. சுய விருப்பத்தைப் பொருத்தது. மனித உணர்ச்சிகளை சட்டங்கள் போட்டு தடுக்க முடியாது" என்று கூறினார். விஜய்சேதுபதியுடன் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குனர் அறிவழகன், புகைப்படக்கலைஞர்கள் உட்படப் பலர் உடன் இருந்தனர்.Trending Articles

Sponsored