`பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் குடிமகன்கள்' – இது ஓ.பி.எஸ் ஊரின் அவலம்...!



Sponsored



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது சோத்துப்பாறை அணை. வார இறுதி நாள்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இந்த அணைக்குச் செல்லும் பாதையில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

”சோத்துப்பாறை அணைக்குச் செல்லும் சாலை மற்றும் தீர்த்தத்தொட்டி சாலை என இரு சாலைகளிலும் குடிமகன்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் ஆகியவற்றில் வந்து சாலை ஓரங்களில் நிறுத்திக்கொண்டு குடித்துவிட்டு சாலையில் செல்பவர்களிடம் பிரச்சனை செய்கிறார்கள். அருகில் சத்யா நகர் என்ற குடியிருப்பு உள்ளது. அதற்குச் செல்லும் பெண்களை வழிமறித்து அசிங்கமாகப் பேசுவதும், அநாகரிகமாக நடந்துகொள்வதுமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பெண்களை பார்த்ததும் தங்களை நிர்வாணமாக்கிக் கொள்கிறார்கள். இவர்களின் தொல்லை குறித்து பலமுறை தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.!” என்று ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழுவின் தேனி, திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் சித்ராதேவி.

Sponsored


Sponsored


இது தொடர்பாக தென்கரை காவல்நிலையத்தில் விசாரித்த போது, “அந்த பக்கம் நாங்கள் ரோந்து செல்வதில்லை. இனி செல்கிறோம்.!” என்றனர்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில், குடிமகன்கள் தங்களை நிர்வாணமாக்கி சாலையில் செல்லும் பெண்களை இழிவுப்படுத்தும் செயல் பொதுமக்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. மேலும், சுற்றுலாப்பயணிகள் வரும் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்நிலையில், காவல்துறை தங்களது ரோந்துப்பணியை தீவிரப்படுத்துவது மட்டுமல்லாமல், குடிமகன்களுக்காக ஓர் எச்சரிக்கை பலகையையும் அப்பகுதியில் நிறுவ வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.



Trending Articles

Sponsored