மக்கள் பங்களிப்புடன் தூர் வாரும் பணி! - கரூரில் பூமி பூஜையுடன் தொடக்கம்Sponsoredகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தொட்டியபட்டியில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஏரி தூர் வாரும் பணி போக்குவரத்துத்துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர், ``பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில், 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி மழைக்காலங்களில் வருகின்ற நீர் வீணாக சென்றுவிடுகிறது. பொதுமக்களின் பங்களிப்புடன், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் சொந்த நிதிகளிலிருந்து ஏரியை தூர் வாரி இப்பகுதியில் மரங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இன்று பணி துவங்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் நிலத்தடி நீரின் அளவு உயரும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். 120 ஏக்கர் பரப்பளவிலான இந்த குளம் தூர்வாரப்படுவதால் சுமார் 450 ஏக்கர் அளவிலான நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி கிராமப்பகுதிகளிலுள்ள வறட்சியான நிலங்களுக்கு அந்த தண்ணீர் பயன்படும் வகையில் செயல்படுத்தியிருக்கிறார். குளத்தின் உட்புறமுள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசுபதிபாளையம் இரயில்வே பகுதியில் குகைவழிப்பாதை ரூ.79.92 லட்சம் மதிப்பிலும், குளத்துப்பாளையம் இரயில்வே பகுதியில் குகைவழிப்பாதை ரூ.193.84 லட்சம் மதிப்பிலும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

Sponsored


மிக விரையில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சர்ச் கார்னர் பகுதியிலிருந்து ஐந்து ரோடு பகுதி வரை பாதாள சாக்கடையில் பழைய பைப்லைன் பழுதடைந்துள்ளதால் அதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும்" என்றார்.Trending Articles

Sponsored