`நியூஸ் ஜெ’ - தொலைக்காட்சிக்கு முன்னோட்டமாக மொபைல் ஆப் தொடங்கும் அ.தி.மு.க!Sponsoredதொலைக்காட்சிக்கு முன்னோட்டமாக அ.தி.மு.க சார்பில் `நியூஸ் ஜெ' என்ற வெப்சைட் ஒன்றைத் தொடங்கவுள்ளனர். இதற்கான தொடக்க விழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு உண்டானது. அதன்பிறகு நடந்த அரசியல் களேபரங்களில் சசிகலா குடும்பம் அ.தி.மு.க-வை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வசம் அ.தி.மு.க சென்றதுடன் அதன் ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே, அ.தி.மு.க-வின் செய்தித்தாளாக இருந்துவந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும், அந்த நாளிதழின் வெளியீட்டாளர் என்ற பொறுப்பு சசிகலாவிடம் தான் இருந்தது. அதேபோல, ஜெயா டி.வி-யும் சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, இதனை அவர்களது உறவினர்களை கவனித்து வருகின்றனர்.

Sponsored


இதனால் அ.தி.மு.க-வுக்கு தனி நாளேடு, செய்திச் சேனல் தொடங்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி சமீபத்தில் `நமது அம்மா' நாளிதழ் தொடங்கப்பட்டது. விரைவில் செய்திச் சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்கு  `நியூஸ் ஜெ' எனப் பெயரிட்டுள்ளனர். சேனல் தொடங்குவதற்கான வேலைகள் மும்மராக நடந்து வருகிறது. இதற்கிடையே, சேனல் தொடங்குவதற்கு முன்பாக  `நியூஸ் ஜெ' லோகோ, மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் வெளியிடப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு விழா நடைபெறவுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இதனைத் தொடங்கி வைக்கின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored