`இன்னொரு குன்றத்தூர் சம்பவம்?’ - குழந்தைகளைக் காப்பாற்றிய கணவர்Sponsoredசென்னை அண்ணாநகரில் குடியிருக்கும் பேராசிரியை ஒருவர், குன்றத்தூர் அபிராமியைப் போல, தான் பெற்ற இரண்டு குழந்தைகளுக்கும் மயக்க மருந்து கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், பேராசிரியையின் நண்பர் போலீஸிடம் சிக்கியுள்ளார்.  

சென்னை அண்ணாநகரில் குடியிருக்கிறார் அந்தப் பேராசிரியை. அவருக்கும் கடவுளின் பெயரைக் கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும்  பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் பழக்கம் நீண்ட காலமாகத் தொடர்ந்துள்ளது. இந்தத் தகவலையறிந்த பேராசிரியையின் கணவர், மனைவியைக் கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதற்கிடையில், குன்றத்தூர் அபிராமியைப் போல இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பேராசிரியை மயக்க மருந்து கொடுத்தாக அவரின் கணவர் போலீஸில் தெரிவித்துள்ளார். மேலும்,  அந்தப் பேராசிரியையின் தவறைக் கண்டுபிடித்த கணவர், உடனடியாக குழந்தைகளைக் காப்பாற்றியதோடு, அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் பேராசிரியரியையிடமும் கடவுளின் பெயரைக் கொண்ட ரியல் எஸ்டேட் அதிபரிடமும்  விசாரித்துவருகின்றனர். 

Sponsored


 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பேராசிரியையின் கணவர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது. இந்தத் தம்பதி, காதலித்துத் திருமணம் செய்துள்ளனர். பேராசிரியையின் தங்கையின் மூலம்தான் ரியல் எஸ்டேட் அதிபர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். சம்பவத்தன்று, பேராசிரியையுடன் ரியஸ் எஸ்டேட் அதிபர் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் பேராசிரியையின் கணவர் பார்த்துள்ளார். அதன்பிறகே, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பேராசிரியைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். குன்றத்தூர் அபிராமி வழக்குபோல, இந்தச் சம்பவம் மாறுவதற்குமுன் தடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

Sponsored


சம்பந்தப்பட்ட பேராசிரியை நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். `நானும், என் கணவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் குடியிருந்தோம். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் கணவர், பல தொல்லைகளை எனக்கு கொடுத்துள்ளார். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. கணவர் மட்டுமல்லாமல் அவரின் அப்பாவாலும் நான் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய முழு சம்பளத்தையும் கணவரின் குடும்பத்தினர் எடுத்துக்கொள்வார்கள். கடந்த ஜனவரி மாதம் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். அப்போது எனக்கு  உதவி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது போலீஸில் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளனர் என் கணவர் குடும்பத்தினர். 

நான் போலீஸில் புகார் கொடுத்தால் என் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சூழ்நிலையில், நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இரண்டு குழந்தைகளும் கணவருடன்  உள்ளனர். அவர்களைப் பார்க்க முடியாமல் தவிக்கிறேன். ஆனால், என் மீது போலீஸில் தவறான தகவல்களை கணவர் தெரிவித்துள்ளார். அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் என் தரப்பு நியாயத்தை கூறியதும், அவர்கள் புரிந்துக் கொண்டனர். என் கணவருக்கு அந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், உண்மையில் என் கணவர், அவரிடம் கடனாகப் பணம் வாங்கியிருந்தார். அதைக் கேட்டபோதுதான் பிரச்னை ஏற்பட்டது. என் மகளுக்காகத்தான் நான் வாழ்கிறேன். ஆனால், என்னை குன்றத்தூர் அபிராமியோடு ஒப்பிட்டுச் சொல்வதை தாங்கமுடியவில்லை’’ என்றார் கண்ணீர்மல்க.Trending Articles

Sponsored