`வேலைக்குச் சேர்ந்த 9-வது நாளில்... நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சிகொடுத்த ஊழியர்! Sponsored 

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு நகைக்கடையில், வேலைக்குச் சேர்ந்த ஒருவர்  57 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணா நகரில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்தக் கடையில் 57 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

Sponsored


கொள்ளை நடந்த நகைக்கடைக்குச் சென்ற போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, நகைக்கடை ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கொள்ளைச் சம்பவம் நடந்தபிறகு, அவர் வேலைக்கு வரவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதனால், அவர்குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போதுதான் அந்த ஊழியர் வேலைக்குச் சேர்ந்து 9 நாளாவதாக கடையின் மேலாளர் தெரிவித்தார். 

Sponsored


 இதையடுத்து, போலீஸார் அந்த நபர்குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் முகமது எனத் தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரித்தால் கொள்ளை குறித்த தகவல் தெரியவரும். வேலைக்குச் சேர்ந்து சில நாளிலேயே கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored