`விவசாயிகளை சந்திக்கதான் தமிழகம் வந்தேன்; கைது செய்துவிட்டார்கள்!’ - கொந்தளிக்கும் யோகேந்திர யாதவ்Sponsoredஎட்டு வழிச் சாலை பிரச்னைக்காக தமிழக விவசாயிகளைக் காண வந்த யோகேந்திர யாதவை, தமிழக காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக்  கைதுசெய்துள்ளனர். 

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சேலம் வரை சுமார் 277 கி.மீ தொலைவுக்கு 10,000 கோடி செலவில் பசுமைச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விவசாய நிலங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள் என இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு இந்தச் சாலை அமையும் என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதனால், சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். 

Sponsored


இந்நிலையில், 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் சிலர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எட்டுவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்திக்கச் சென்றபோது, சி.நம்மியந்தல் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளது தமிழக காவல்துறை. யோகேந்திர யாதவ் மற்றும் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெறையூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

Sponsored


இது தொடர்பாக தேவேந்திர யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நாங்கள் திருவண்ணாமலைக்கு வருவதால், காவலருக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. நான் விவசாயிகளின் இல்லத்துக்குச் செல்வதற்காகவே வந்தேன் எனக் கூறினேன். ஆனால், காவல்துறை கண்காணிப்பாளர் என்னை அனுமதிக்கவில்லை. காந்திய ஒத்துழையாமையே இதற்கு ஒரே வழி” எனக் குறிப்பிட்டுள்ளார். இத்துடன், காவலர்கள் யோகேந்திர யாதவின் காரை நிறுத்தி விசாரிக்கும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மற்றுமொரு ட்வீட்டில், “ இதற்காகத்தான் நான் கைதுசெய்யப்பட்டுள்ளேன். சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது தமிழக காவல்துறை அத்துமீறி செயல்படுவதாக நான் கேள்விப்பட்டே இங்கு வந்தேன். ஆனால், அந்த அனுபவம் இன்று எனக்கும் கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.Trending Articles

Sponsored