`ஒப்பந்தக்காரர்களே தரமான சாலை போடவில்லை என்றால்...’ - பரபரப்பைக் கிளப்பிய எச்சரிக்கை போஸ்டர்!Sponsoredகாரைக்குடி நகராட்சி ஒப்பந்தக்காரர்களே... செப் 11 அன்று நடைபெறும் 10 கோடி ரூபாய்க்கான சாலை ஏலத்தில், தரமான ஒப்பந்ததாரர்கள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள். தரமான சாலைகளைப் போடுங்க. தரமற்ற சாலைகளை இனியும் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்”. இப்படியான போஸ்டர்கள் காரைக்குடி முழுவதும் பளிச்சிடுகின்றன. இந்த போஸ்டர்களை ஓட்டிய மக்கள் மன்றம் நிர்வாகிகளிடம் பேசினோம்.


"முந்தைய காலத்தில், காரைக்குடி  நகராட்சி  சேர்மன் இருக்கும்போது, அரசு நிர்ணயம் செய்த தொகைக்கு, ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட சாலையை டெண்டரில் எடுப்பார். அதன்பிறகு அமைச்சர், எம்.பி மற்றும் அதிகாரிகள் வரைக்கும் கமிஷன் கொடுப்பார். ஆக மொத்தம் அவர் கையில் சாலை போடுவதற்கு பற்றாக்குறையான பணமே இருக்கும். இதை வைத்துக்கொண்டு எப்படி தரமான சாலையைப் போட முடியும். ஏற்கெனவே, தேவர் சிலையில் இருந்து பெரியார் சிலை வரைக்கும் செல்லும் சாலை, படுமோசமாக இருந்தது. அதைக் கண்டுபிடித்து அதிகாரிகள் முதல் லஞ்சம் ஒழிப்பு போலீஸார்  துறை வரைக்கும் புகார் அனுப்பி, அவர்கள் வந்து அந்த சாலையை ஆய்வு செய்து, போட்ட சாலையைத் திரும்பவும் போடச்செய்தோம். 

Sponsored


இந்த முறை 10 கோடிக்கு நடக்கும் டெண்டரில், குறைந்தது 10 சாலைகளாவது வரும். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அதிகாரிகள், சாலை போட ஒப்பந்ததாரரிடம் சாலையைக் கொடுத்தால், தரம் இல்லாவிடில் நாங்கள் தரமான சாலையைத் திரும்பவும் போட வைப்போம்” என எச்சரிக்கிறார்கள் இந்த அமைப்பினர்.

Sponsored
Trending Articles

Sponsored