`நவோதயா பள்ளி வழக்கை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது!’ - குற்றம் சாட்டும் குமரி மகாசபாதமிழகத்தில் நவோதயா பள்ளிகளைக் கொண்டுவருவது மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியன தொடர்பான வழக்குகளை தமிழக அரசு தாமதப்படுத்திவருவதாக குமரி மகாசபா குற்றம் சாட்டியுள்ளது.

Sponsored


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைக் கொண்டுவர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ள குமரி மகாசபா அமைப்பின் தலைவர் ராவின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கன்னியாகுமரி மாவட்டத்துக்கு துறைமுகம் கண்டிப்பாக வேண்டும் என நாங்கள் கூறிவருகிறோம். இயற்கை அமைப்பு, தொழில்நுட்பம், வரலாறு ஆகியவற்றைப் பார்க்கும்போது, குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்தான் துறைமுகத்திற்கு உகந்தது. எனவே, குமரி மகாசபா சார்பில் குளச்சலில் துறைமுகம் வேண்டும் என வலியுறுத்துவோம். குமரி மாவட்ட மக்கள் தமிழகத்தில் இருந்தாலும், சகோதரத்துவமும் கலாசாரமும், இயற்கையும் கேரளத்தை ஒத்தது. எனவே, கேரளா மழை பாதிப்பிற்காக இடுக்கி மாவட்டத்துக்கு 70,000 ரூபாய், வயநாடு மாவட்டத்துக்கு 70,000 ரூபாய் நிதி வழங்குகிறோம். விமான நிலையம் இல்லாமல் இருந்தால், குமரி மாவட்டம் முழுமைபெற்ற மாவட்டமாக ஆகாது.

Sponsored


Sponsored


நாடு  முழுவதும் 100 விமான நிலையங்களை அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் அமைக்க உள்ளதாக சுரேஷ் பிரபு கூறியுள்ளார். குமரி மாவட்டத்தில் கண்டிப்பாக விமானநிலையம் அமைக்க வேண்டும். அக்டோபர் 15-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்துகிறோம். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், தங்க நாற்கர சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அது, காவல்கிணறு பகுதியுடன் நின்றுவிட்டது. இப்போது, குமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலை மற்றும் மேம்பாலங்களைத் துரிதப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நவோதயா ஸ்கூல் கொண்டுவருவது மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்றுதல் ஆகிய வழக்குகளை குமரி மகாசபா சுப்ரீம் கோர்ட்டில் நடத்திவருகிறது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தாமதப்படுத்திவருகிறது. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் நாங்கள் இறங்கியுள்ளோம்" என்றார்.Trending Articles

Sponsored