சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு!Sponsoredசிவகாசி அருகே, பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டி எனும் இடத்தில் ராஜி என்பவருக்குச் சொந்தமான கிருஷ்ணசாமி பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில், பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் 50-க்கும்  மேற்பட்ட நபர்கள் வேலைசெய்துவருகின்றனர். 

Sponsored


இந்நிலையில்,  இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர். ஆலையின் ஒரு அறையில் தொழிலாளர்கள் வான வெடிக்கு கெமிக்கல் மருந்து செலுத்தும்போது, தீடிரென மருந்து உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. அறையில் 4 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் உடல் சிதறிப் பலியானார்கள். மேலும், பாண்டி என்பவர் சிகிச்சை பலன் இல்லாமல் சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார். பொன்னுச்சாமி என்பவர் 98 சதவிகித தீக் காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். 

Sponsored


கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த இறந்தவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையிலுள்ள பிரேதப் பரிசோதனை அறைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த இடத்தில், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், ஆலை உரிமையாளர் மற்றும்  ஆலை போர் மேன் மீது மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைசெய்துவருகின்றனர்.Trending Articles

Sponsored