`ரோகினி யானையை நாளை முதல் பார்க்கலாம்’ - வண்டலூர் உயிரியல் பூங்கா அறிவிப்பு!வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்காவில் நாளை முதல் ‘ரோகினி’ யானை பொதுமக்கள் பார்க்கலாம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Sponsored


வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு வயதுள்ள ‘பிர்குர்தி’ என்கின்ற பெண் யானையும் எட்டு வயதுள்ள அசோக் என்கின்ற ஆண் யானையும் இருந்து வந்தன. பிறந்த மூன்று மாதத்தில் கொண்டுவரப்பட்ட அசோக், எட்டு வயது வந்ததும் வனவிலங்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது. பொதுவாக யானைகள் 8 வயதில் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் மதம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவற்றை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் யானைகள் முகாமிற்கு அனுப்பிவிடுவார்கள். ஆனைமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து நான்கு வயதுள்ள ‘ரோகினி’ என்ற பெண் யானை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புதிதாக வந்துள்ளது. நாளை முதல் ரோகினி யானையை பார்வையாளர்கள் காணலாம். 

Sponsored


“ரோகினி பெண் யானையானது இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் காட்டில் தாயினால் கைவிடப்பட்ட யானையாகும். ரோகினி மனிதர்களிடம் எளிமையாக நெருங்கிப் பழகும் தன்மை கொண்ட யானை. அறிவுக் கூர்மையும் அதிகம். நாளை முதல் ரோகினி யானையைப் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம்” எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored