`நூதன முறையில் ஆன்லைன் மோசடி!' - சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை ஏமாற்றிய மாணவர்கள்Sponsoredசென்னை துரைப்பாக்கத்தில் நூதன முறையில் ஆன் லைன் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

துரைப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் சரவணன் என்கிற வேல்ராஜ். இவரின் கடையில், அந்த பகுதியில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர், பொருட்கள் வாங்கியுள்ளனர். பணத்தை பே.டி.எம் மூலம் ஆன்லைனில் செலுத்தியுள்ளனர். கடையின் உரிமையாளரும், தன்னுடைய வங்கிக் கணக்கை சரிபார்க்கவில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பொருள்களை ஆன்லைனில் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் வங்கி கணக்கை கடையின் உரிமையாளர் ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் ஆன்லைன் மோசடி, நடத்திருப்பது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் சுதாரித்துக்கொண்டார்.  இன்று மாணவர்கள் மீண்டும் கடைக்கு வந்து, வழக்கம்போல பொருள்களை வாங்கினார். பிறகு ஆன்லைனில் பணம் செலுத்தினர்.

Sponsored


அப்போது கடையின் உரிமையாளர் மாணவர்களிடம் பணத்தை எப்படி அனுப்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். மாணவர்களும்  தங்களுடைய செல்போன் மூலம் பணத்தை அனுப்புவதை விளக்கியுள்ளனர். அதை கடையின் உரிமையாளரும், ஆர்வமாக கேட்டார். ஆனால் மாணவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பிறகு, மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த சிலரை துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்து, ஆன்லைன் மோசடி குறித்து கடையின் உரிமையாளர் சரவணன் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாணவர்கள் மற்றும் அவரின் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Sponsored


மாணவர்களிடம் விசாரித்த போது,சென்னையில் உள்ள பிரபல கடைகளில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களை விடுவிக்க பல தரப்பிலிருந்து போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கையும் களவுமாக, மாணவர்களைப் பிடித்து கொடுத்ததோடு ஆதாரமாக, சி.சி.டி.வி கேமிரா காட்சி, மாணவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் குறித்த வீடியோ ஆகியவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் கடை உரிமையாளர் சரவணன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக, போலீஸார் கூறுகையில், ``ஆன்லைன் மோசடி குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். இதில், இரண்டு பேர் மாணவர்கள், மற்றவர்கள் மாணவர்களின் நண்பர்கள். ஹாஸ்டலில் ஒரே அறையில்  தங்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு (பேடிஎம்) தகவல் தெரிவித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மோசடியில் ஈடுபட்டவர்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்தி தவறு செய்துள்ளனர். அதாவது சம்பந்தப்பட்ட ஆன் லைன் நிறுவனத்தின் ஆப்ஸை போல ஒன்றை செல்போனில் டவுன் லோடு செய்துள்ளனர். அதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.Trending Articles

Sponsored