எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடைக்கான கால்கோள் விழா! - நான்கு அமைச்சர்கள் நாகர்கோவில் வருகை!Sponsoredநாகர்கோவிலில் வரும் 22-ம் தேதி நடக்கும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் விழா நாளை நடக்கிறது. இதில் நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 22-ம் தேதி, நாகர்கோவில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவிற்கான கால்கோள் விழா, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நாளை (செப்.9) காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகிய 4 அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Sponsored


மேலும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் உட்படப் பலர் கலந்துகொள்கின்றனர். கால்கோள் விழாவைத் தொடர்ந்து, வடசேரி  பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆர். தொடர்பான புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. முன்னதாக, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Sponsored
Trending Articles

Sponsored