`தப்பு பண்ணா அடிக்கக் கூடாது; குணமா சொல்லணும்' - சமூக வலைதளங்களை கலக்கும் சிறுமி!



இன்று முழுவதும் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது தமிழக சிறுமியின் கண்ணீர் வீடியோ ஒன்று.

Sponsored


கண்ணீர் வீடியோ என்றதும் தவறாக எண்ண வேண்டாம். வலைதளங்களின் உலா வரும் அந்த வீடியோவில், சேட்டை செய்ததற்காக தாயிடம் அடிவாங்குகிறார் அந்தச் சிறுமி. அப்போது அழுதுகொண்டே தாய்க்கு அட்வைஸ் கூறுகிறார். அதில், 

Sponsored


தாய் - சேட்டை பண்றது தப்பா? தப்பில்லையா? பேச்ச மாத்தாம பதில் சொல்லு...

Sponsored


சிறுமி - தப்புத்தான்.. அதுக்கு என்ன சொல்லணும்?

தாய் - அதுக்குத்தான் அடிக்கிறது.. புரிஞ்சதா?

சிறுமி - அடிச்சா தப்பு..

தாய் - என்ன?

சிறுமி - குணமா வாய்ல சொல்லணும். திட்டாம.. அடிக்காம வாய்ல சொல்லணும்...

தாய் - அதுக்கு நீ சேட்டை பண்ணாம இருக்கணும்...

சிறுமி - சேட்டை பண்ணாலும் வாய்ல குணமா சொல்லணும்...

தாய் - இப்ப எதுக்கு நீ அழுதுகிட்டு இருக்கிற?

சிறுமி - அடிச்சா அழுகாம என்ன செய்வாங்க? அப்பறம் நீயே சொல்லு..

தாய் - சேட்டை பண்ணா அடிக்காம என்ன பண்ணுவாங்க.. நீ சொல்லேன்...

சிறுமி - குணமா வாய்ல சொல்லணும்.... 

அழுதுகொண்டே தாயிடம் வாதம் செய்யும் அந்தச் சிறுமி ரியாக்ஷன்களும் `க்யூட்' ஆக பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. இதனால் இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டுவருவதுடன் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 



Trending Articles

Sponsored