`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை!’ - தமிழக அமைச்சரவை முடிவுSponsoredராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  


ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருஇகன்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 7 பேரை முன்விடுதலை குறித்து, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

Sponsored


Sponsored


அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்ட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது எனவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மறைந்த முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஏற்கெனவே பரிந்துரை செய்த நிலையில், அதை மீண்டும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், `ஆளுநர் அமைச்சரவையின் ஒப்புதலை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored