`அவரின் அரசியல் எதிர்காலம் குறித்து போகப்போகத் தெரியும்!’ - அழகிரி புகழ்பாடும் செல்லூர் ராஜூ"அழகிரியின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது போகப்போக தெரியும்"  என்று அழகிரியின் ஆதரவாளர் போல அமைச்ச செல்லூர் ராஜு பேசியது அ.தி.முகவினரை மட்டுமல்லாது தி.மு.கவினரையும் அதிர வைத்துள்ளது.

Sponsored


மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இன்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை தொடங்கி வைக்க வந்த அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, "முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி, 4 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தவர், அவரது தந்தையின் மறைவுக்காக சமீபத்தில் நடத்திய பேரணியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். தி.மு.கவினர் செய்த பல்வேறு இடையூறுகளைத் தாண்டி அந்த பேரணியை சிறப்பாக நடத்திக் காட்டினார். இதில் மு.க.அழகிரி ஆற்றிய சிறப்பான பணி அனைவருக்கும் தெரியும். அவருடைய அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது போகப்போகத் தெரியும். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெறுவது உறுதி. மெகா கூட்டணி அமைத்தும் தி.மு.கவால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை" என்றார்.

Sponsored


அழகிரியை அவரது தீவிர ஆதரவாளர் போல செல்லூர் ராஜு புகழ்ந்து பேசியது மதுரையில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored