காஞ்சிபுரத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!Sponsoredகாஞ்சிபுரம் பிள்ளயைார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவக்குமார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று மாலை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மறைந்த ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ். ஸ்ரீதருக்கு பிறகு காஞ்சிபுரத்தில் கோலோச்ச வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர் பாணியில் கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், உள்ளிட்ட சட்டவிரோதத் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். தலைமறைவாக இருந்த தினேஷுக்கு எதிராக சிவக்குமார் காவல்துறையிடம் புகார் அளிப்பது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தினேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தினேஷ் மூலம் சிவக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காஞ்சிபுரம் உளவுப் பிரிவு காவல்துறையினர் சிவக்குமாரை எச்சரித்து வந்தனர். இந்தநிலையில் இன்று 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் தினேஷ் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored