`எனது 28 ஆண்டுகால வேதனைக்கு விடுதலை!’ - முதல்வரைச் சந்தித்த அற்புதம்மாள் நெகிழ்ச்சிபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  முன்விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார்  அற்புதம்மாள்.

Sponsored


உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடிய, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை முன்விடுதலை செய்ய முடிவு செய்தது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட உள்ளது. இதையடுத்து, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Sponsored


அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `உங்கள் மகன் விரைவில், வெளியே வருவார் என்று முதல்வர் எனக்கு ஆறுதல் கூறினார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. 28 ஆண்டு கால போராட்டம் எப்படி முடியும் என்று தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். எனது 28 ஆண்டுகால வலிக்கும், வேதனைக்கும் விடுதலை கிடைத்துள்ளது. எனது மகன் சிறைக்குச் செல்லும்போது 19 வயது, இப்போது 47 வயது. அவனுக்கு  வயது, இளமை எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து அமைச்சர்களும் ஒன்றுகூடி 7 பேரின் குடும்பத்திற்கும் நிம்மதியை கொடுத்திருக்கிறார்கள். நான் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். யாரும் இதை தயவுசெய்து அரசியலாக்கிடாதீங்க. அரசியல் பண்ணிடாதீங்க. தமிழக அரசுக்கும் 7 பேரின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, 7 பேரைஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored