கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய கார் - நான்கு பேர் உயிரிழந்த சோகம்!Sponsoredராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சாலையில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இரு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். விபத்துகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் அந்தோணிராஜ் கான்ட்ராக்ட் தொழில் செய்துவருகிறார். இவரது உறவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவரை ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர். காரை அந்தோணிராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். 
இந்தக் கார் உச்சிப்புளி அருகே உள்ள வட்டான்வலசை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியுள்ளது.

Sponsored


இந்தக் கோர விபத்தில் சிக்கிய அந்தோணிராஜ், இரு பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், அந்தோணிராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் சிக்கிய காரில் இருந்த அந்தோணிராஜ் உள்ளிட்ட நால்வரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

Sponsored
Trending Articles

Sponsored