``என் மகள் மஹிக்கு ஐந்து வயது... அவள்தான் என் உலகம்!’’ -தன் குழந்தை பற்றி ரேவதி #VikatanBreaksSponsoredதமிழ் சினிமா சிலாகித்த சில ஹீரோயின்களில் ரேவதியும் ஒருவர். சினிமா மற்றும் சின்னத்திரையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனி அடையாளத்துடன் ஜொலிப்பவர். குடும்பப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கும் ரேவதியின் உலகம், மகள் மஹிதான். மஹி பற்றி பல ஊர்ஜிதமாகா தகவல்கள் உலாவுகின்றன. ’எது உண்மை... எது நிஜம் என சொல்வீர்களா?’ என ரேவதியிடம் கேட்டேன். சின்ன யோசனைக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்...
 

"வாழ்க்கைல பல சோதனைகளைச் சந்திச்சு மீண்டுவந்திருக்கேன். தாய்மை, ஒவ்வொரு பெண்ணுக்குமான அர்த்தம். அதற்காக நான் ஏங்கின, கலங்கின தருணங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. கணவருடன்  விவாகரத்துப் பெற்ற பிறகு, தாய்மை குறித்து ரொம்பவே யோசிச்சு முடிவெடுத்தேன். டெஸ்ட்டியூப்(TestTube) முறையில் கர்ப்பம் ஆனேன். என் மகள் மஹியைப் பெற்றெடுத்தேன். அவள், என்னையும் வெளியுலகையும் பார்த்த நொடியை வாழ்நாளில் மறக்கமுடியாது. இப்போ, அவளுக்கு 5 வயது. ஓர் அம்மாவா, அவளை வளர்த்து ஆளாக்குவதுதான் என் ஆகச்சிறந்த பொறுப்பு. அதை நிறைவுடன் செய்துட்டிருக்கேன். மஹி, தத்தெடுக்கப்பட்ட குழந்தைனு வதந்திகள் உலாவுவது பற்றி கவலையில்லை. மத்தவங்க கேட்டபோதும் மஹியைப் பற்றி பெரிசா சொன்னதில்லை. விகடன்லதான் உண்மையை வெளிப்படையா சொல்றேன். மஹிதான் என் உலகம். அவள்தான் என் வாழ்நாள் அடையாளம்!" என்கிறார் கண்களில் காதலும் தாய்மையும் மின்ன!

Sponsored


தனது வாழ்க்கைப் பயணம் குறித்து நடிகை ரேவதி விரிவாகப் பேசுகிறார், அவள் விகடன், 'அவள் அரங்கம்' பகுதியில்... விரைவில்!

Sponsored
Trending Articles

Sponsored