‘தி.மு.க பலம் பெற, ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும்’- மதுரை ஆதீனம்Sponsored'தி.மு.க பலம் பெறுவதற்கு, ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும்' என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், "குட்கா ஊழலில் சிபிஐ மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊழல் அமைச்சர்கள்மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.க தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது. தி.மு.க பலப்பட வேண்டுமென்றால், ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும்.

Sponsored


தமிழகத்தில், ஓ.பி.எஸ், ஈ.பி. எஸ் நல்லாட்சி செய்கிறார்கள். மத்தியில் மோடியும் நல்ல ஆட்சி செய்கிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும், தமிழகத்தில் அ.தி.மு.க-வும் நல்ல முறையில் வெற்றிபெறும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை ஆளுநர் நிச்சயம் விடுதலைசெய்ய உத்தரவிடுவார்.  அதற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறேன். நித்தியானந்தா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் உள்ளது. ஆனால், அவர் மீண்டும் ஆதீனத்தில் நுழைய முடியாது. 

Sponsored


பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்து, 30 ரூபாய்க்குக்  கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. ஷோபியா, விமானத்தில் அப்படி நடந்திருக்கக் கூடாது. அதேநேரத்தில், அப்பெண்ணை காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கக் கூடாது. எம்.ஜி. ஆர், ஜெயலலிதா போல எல்லா நடிகர்களும் வர முடியாது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களுக்குப் பதிலாக, குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை முதல்வர் அமைச்சராக்குவார். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது" என்றார்.Trending Articles

Sponsored