சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்!Sponsoredலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானமான Antonov AN-124 விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

ரஷ்யாவைச் சேர்ந்த Volga-Dnepr Airlines நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் 53.46 டன் சரக்குடன் சென்னைக்கு வந்தது. சீனாவின் ஜியாங் நகரில் இருந்து பிரமாண்டக் கருவிகள் இதில் கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் AN-124 ரக விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறை. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை இருப்பதால், இனிமேல் பெரிய ரக சரக்கு விமானங்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


Sponsored


இந்த விமானம் 69.1 மீட்டர் நீளம் கொண்டது. இறக்கைகள் மட்டும் இரு புறமும் சேர்த்து 73.3 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரமாண்ட உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள், தொழிற்சாலைக் கருவிகளைக் கொண்டு செல்ல இந்த விமானம் ஏற்றது. அதிகபட்சம் 150 டன் சரக்குகளை இதில் கொண்டு செல்ல முடியும். 1982-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை AN-124 ரக விமானங்கள் 55 தயாரிக்கப்பட்டன. தற்போது சில மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 

உலகில் மிகப் பெரிய சரக்கு விமானமாக  An-225 Mriya கருதப்படுகிறது. இது 280 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது. 1980-ம் ஆண்டு இந்த ரக விமானம் ஒன்றே ஒன்று தயாரிக்கப்பட்டது. தற்போது வரை An-225 Mriya பயன்பாட்டில் உள்ளது. இதுவும் ரஷ்ய தயாரிப்புதான்.Trending Articles

Sponsored