`ஒருநாள் சிறைக்குப் போவார்!’ - வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் தி.மு.க புகார்Sponsoredஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார் மனுவை, தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம், அவர் வழங்கிய புகார் மனுவில், `அமைச்சர் வேலுமணி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசு ஒப்பந்தங்களை, தனக்கு நெருங்கியவர்களுக்கு வழங்கியுள்ளார். அவர் மீது குற்ற வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற ஊழல் தொடர்பான புகார் மனு தி.மு.க சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 3000 சதவிகிதம் அதிகரித்து கொட்டேஷன் அளித்த அவரின் தம்பி, நண்பர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. இதை ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு அளித்துள்ளோம். 

Sponsored


ஏற்கெனவே, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நாங்கள் அளித்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா என்ற எண்ணம் எழுகிறது. நாங்கள் புகார் கொடுத்தால் மட்டும்தான், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கின்றனர். புகார் குறித்த செய்தி வெளியிட்டால் அந்தப் பத்திரிகை மிரட்டலுக்குள்ளாகிறது. இன்றைக்கு வேண்டுமானால் ஊழலில் ஈடுபடும் இந்த ஆட்சியாளர்கள் சிறைக்குப் போகாமல் இருக்கலாம், சசிகலா சிறைக்குப்போனது போல் ஒரு நாள் இவர்களும் போவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored