`சீமராஜா படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை!’ - உயர் நீதிமன்றம் உத்தரவுSponsoredநடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள `சீமராஜா’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சீமராஜா. இந்தப் படத்தின் டீசர் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையை பெரும் வரவேற்பைப் பெற்றது. 24 ஏ.எம் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள, படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையை பெறும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சீமராஜா படம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வரும் 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

Sponsored


இந்நிலையில், படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும், இதுபோன்ற முறையில் படம் வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால், சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி தயாரிப்பாளர், ஆர்.டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடைவிதித்து உத்தரவிட்டார்.

Sponsored
Trending Articles

Sponsored