திருப்பூரில் அ.தி.மு.க பிரமுகர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை..!Sponsoredதிருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

திருப்பூர் ஸ்ரீநகர் காட்டன் மில் சாலையில் வசித்து வந்தவர் இளங்கோ. அ.தி.மு.க பிரமுகரான இவர், சின்ன பொம்மநாயக்கன்பாளையம் என்ற பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். அத்துடன் வட்டிக்குப் பணம் தரும் தொழிலிலும் இவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் திருநீலகண்டபுரம் என்ற பகுதியில் உள்ள சிலரை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அவர்களுக்கும் இளங்கோவுக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னுடன் வந்த நண்பரை அழைத்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் இளங்கோ. அப்போது அவரை பின்தொடர்ந்தவாறு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், இளங்கோவின் வாகனத்தை மறித்து அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி வீழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்கள்.

Sponsored


படுகாயமடைந்த இளங்கோ அங்கேயே மயங்கிய நிலையில் கீழே விழுந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இளங்கோவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பலத்த காயமடைந்திருந்ததால், இளங்கோவை உடனடியாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு இளங்கோவை கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இளங்கோவை கொலை செய்த நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored