வால்பாறை எங்கும் கொடிகட்டிப் பறக்கும் சட்டவிரோத மது விற்பனை..! கண்டுகொள்ளுமா காவல்துறைSponsoredகோவை, வால்பாறை டவுனுக்குள் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இரண்டு லட்சத்துக்கும் மேல் இருந்த மக்கள் தொகை, மனித விலங்குகள் மோதலால் தற்போது 40 ஆயிரம் பேராக குறைந்திருக்கிறது. முன்பு இங்கு தமிழக அரசின் சார்பில் 15 மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. மக்கள் போராட்டத்தை அடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் ரொட்டிக்கடை அருகே உள்ள பாறைமேடு பகுதியில் இரண்டு மதுபானக் கடைகள் தற்போது  இயங்கி வருகின்றன.

Sponsored


மது பிரியர்கள், மது வாங்க வேண்டுமானால் வால்பாறை பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் சென்று வாங்கி வர வேண்டும். இந்த நிலையில், அரசு மதுபானக் கடையில் இருந்து மதுவை வாங்கி புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை, அம்மா உணவகம் பின்புறம் கள்ளச் சந்தையில் இருமடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது. 

Sponsored


நகரத்துக்கு உள்ளாகவே மது கிடைப்பதால், மதுப் பிரியர்களும் அதிக விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றனர். மேலும், அனைத்து கட்சிகளும் மது விஷயத்தில் ஒன்று கூடிவிடுவதாகவும், இதனால் தற்போது வரை வால்பாறை நகருக்குள் அரசு மதுபான கடை வராமல் தடுத்து வருவதாகவும், அங்கிருக்கும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, தொலைபேசியில் தொடர்புகொண்டு மது ஆர்டர் செய்தால், வீட்டுக்கே வந்து, டோர் டெலிவரி செய்யவும் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த மது விற்பனையில் ஒரு தொகை காவல் நிலையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் செல்வதால், மக்கள் பாதிக்கப்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாண்டியராஜனை தொடர்புகொண்டபோது, நம்மிடம் விவரங்களை கேட்டுக்கொண்டு, "விசாரிக்கிறேன்" என்றார்.Trending Articles

Sponsored