முழுக் கொள்ளளவை எட்டிய வைகை அணை - குடிநீருக்காக தண்ணீர் திறப்புSponsoredவைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின்  குடிநீர்  தேவைக்காக நேற்று (10/09/18) மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை நினைத்ததைவிட அதிகமான மழைப்பொழிவை தந்ததால், ஏழு வருடங்களுக்குப் பிறகு வைகை அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. அது மட்டுமல்லாமல், 20 நாள்களுக்கு மேலாக அணையின் முழுக்கொள்ளளவான 69 அடி நிலை நிறுத்தப்பட்டது.

Sponsored


அதைத்தொடர்ந்து மதுரை, சிவகங்கைப் பகுதி பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. அதோடு, 58-ம் கால்வாயிலும் சோதனை ஓட்டமாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், இன்று (10.09.18) மாலை 6 மணிக்கு வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி  தண்ணீர் திறக்கப்பட்டது. 18 நாள்கள் தண்ணீர் திறக்கப்படும் எனவும், மொத்தமாக 1,560 மில்லியன் கன அடி தண்ணீர் மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகத் திறந்துவிடப்பட்டும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored