15 நாள்கள் நீதிமன்றக் காவல் - திருச்சி சிறையில் புல்லட் நாகராஜ்!



Sponsored



மதுரை மத்திய சிறையின் காவல்கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் நேற்று பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நள்ளிரவில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.


மதுரை சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்ட விவகாரத்தில், மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரவுடி புல்லட் நாகராஜ் தேடப்பட்டுவந்தார். அதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தென்கரை காவல்நிலைய ஆய்வாளர் மதனகலாவுக்கு எதிராகவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார் புல்லட் நாகராஜ். இதனால் புல்லட் நாகராஜை தீவிரமாகத் தேடி வந்தனர் காவல்துறையினர். இந்த நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பிக்கு எதிராக மூன்றாவது ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு காவல்துறைக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தார் நாகராஜ். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்திருந்தனர். இதற்காகப் பெரியகுளம் காந்திசிலை அருகே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Sponsored


அப்போது தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புல்லட் நாகராஜ் வரவே. அதைக் கண்ட எஸ்.பி. காசி ராஜன், அவனை விரட்டிச் சென்று பிடித்தார். கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜ் தென்கரை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். மதுரையில் இருந்து கரிமேடு காவல்துறையினரும் தென்கரை காவல்நிலையத்துக்கு வந்து புல்லட் நாகராஜிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நள்ளிரவில், பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.  நீதிபதி அருண்குமார் உத்தரவின் பேரில் திருச்சி சிறையில் நள்ளிரவில் புல்லட் நாகராஜ் அடைக்கப்பட்டார்.

Sponsored




Trending Articles

Sponsored