ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்குமா?Sponsoredலகிலேயே மிகப்பெரிய மருத்துவத் திட்டமான  `ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம்' செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  இதன்மூலம், 2011 சென்சஸ் அடிப்படையில் 10 கோடியே 70 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக 5 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தக் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. அதனால், இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான மாநிலங்களை இணைக்கும், பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதில் சேருவதற்கு, பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்கள் அமல்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே, டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைய மாட்டோம்; மாநிலங்களில் அமலிலுள்ள திட்டங்களையே நடைமுறைப்படுத்தப்போவதாக திட்டவட்டமாகத்  தெரிவித்துவிட்டன.  மேலும், சில மாநில அரசுகள், திட்டத்தில் சேருவது தொடர்பாக, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  அதேபோல தமிழகத்திலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன், மாநில அரசு இணையுமா அல்லது தனியாக நடத்துமா என்பது கேள்வியாகவே இருக்கிறது. தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரபூர்வமாக இன்னமும் தெரிவிக்கவில்லை.   

Sponsored


தமிழகத்தின் நிலை குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம், ``தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 1 கோடியே 58 லட்சம் பேர் பயனாளியாக இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் 77 லட்சம் பேர் மட்டுமே பயனாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Sponsored


அதேபோல, பரிசோதனை முறைகள் தொடங்கி,  உயர் சிகிச்சை வழிமுறைகள் வரை தற்போது 1027 நோய்களுக்கு சிகிச்சை தமிழக காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறமுடியும். மத்திய அரசின் சுகாதார திட்டத்திலுள்ள 1,350 மருத்துவப் பரிசோதனை மற்றும் நோய்களுக்கான சிகிச்சைகளில் 1,115  பரிசோதனைகளும், நோய்களுக்கான சிகிச்சைகளும் ஒத்துப்போகின்றன. இதுபோல, இரண்டு திட்டங்களுக்கு பல ஒற்றுமைகளும், சில வேறுபாடுகளும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் களைவதற்கான இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று (11.09.2018) மதியம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் உடன்பாடு எட்டப்பட்டால், தமிழகத்தின் நிலை இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.Trending Articles

Sponsored