5,000 போலீஸ்... ட்ரோன் கண்காணிப்பு... பாதுகாப்புடன் நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்



பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 61-ம் ஆண்டு நினைவு தின குருபூஜை இன்று காலை தொடங்கியது. அ.தி.மு.க சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில்  நடந்த சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Sponsored


இம்மானுவேல் சேகரனின் 61-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இம்மானுவேல் சேகரனின் சொந்த கிராமமான செல்லூரைச் சேர்ந்தவர்களும் இம்மானுவேல் சேகரனின் குடும்பத்தினரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி முதல் மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் தமிழக அமைச்சர்கள்  மணிகண்டன், ராஜலெட்சுமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோருடன் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும் இம்மானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் முன்னாள்  மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட தி.மு.க-வினர் சிலர் தற்போதைய மாவட்டச் செயலாளர் இன்றி தனியாக வந்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலைக் குமார், புதூர் பூமிநாதன், மாவட்டச் செயலாளர் குணா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Sponsored


Sponsored


இதைத்தொடர்ந்து தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, தமிழரசி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் உள்ளிட்ட தி.மு.க-வினர் தொண்டர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ ராம்பிரபு, மாவட்டத் தலைவர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, ரங்கநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியச் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும், இம்மானுவேல் நினைவிடம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகள், பதற்றமான கிராமங்களில் கண்காணிப்புக் கேமராக்கள், ட்ரோன்  மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.



Trending Articles

Sponsored