`பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இதுதான் வழி!’ - அமைச்சர் ஜெயக்குமார் யோசனை



Sponsored



'மத்திய அரசு, தமிழகத்துக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுத்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பது தொடர்பாகப் பரிசீலிக்கலாம்' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை மற்றும் கன்னியாகுமரியில் நடைபெறும். சென்னையில் நடைபெறும் விழாவில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொள்வார்கள். இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இதில், தேசியத்  தலைவர்கள் கலந்துகொள்வதுகுறித்து, கட்சித் தலைமை முடிவெடுக்கும்.

Sponsored


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைசெய்வதில், தமிழக  அரசுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. இந்த விவகாரத்தில், தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ஆளுநர் செயல்படுவார் என நம்புகிறோம். 7 பேரின் விடுதலைகுறித்து காங்கிரஸ் ஒத்துழைப்பு தரமறுத்தால், ஸ்டாலின் கூட்டணியிலிருந்து வெளியேறத் தயாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Sponsored


தொடர்ந்து பேசிய அவர், ``பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு தந்தால், ஆந்திராவைப்போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க பரிசீலனை செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்



Trending Articles

Sponsored