``தீர்மானங்களை உடனடியாகப் பதிவேற்றுங்கள்’’ - கோவை மாநகராட்சிக்கு உள்ளாட்சி முறைமன்ற நடுவம் உத்தரவு!Sponsoredகோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானங்களை, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி, குடிநீருக்கு பிரான்ஸ் நாட்டு நிறுவனம் என்று, கோவையில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டுக்கு மேலாக, மாநகராட்சி மாமன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. மேலும், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இதுகுறித்த தகவல்களைக் கேட்டாலும், தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படாமலேயே இருந்தன.

Sponsored


இதையடுத்து, கோவை மாநகராட்சி இணையதளத்தில் தீர்மான நகல்கள் பதிவேற்றாமல் இருப்பது குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி முறைமன்ற நடுவம், தியாகராஜன் மற்றும் கோவை மாநகராட்சி ஆகிய இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.

Sponsored


இந்நிலையில், “மாமன்றத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படாமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. எனவே, கோவை மாநகராட்சியில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான நடவடிக்கையை உடனுக்குடன் மேற்கொள்வதுடன், 2017-ம் ஆண்டு ஜூலை முதல், தற்போதுவரை மன்றத் தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று கோவை மாநகராட்சி ஆணையருக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.Trending Articles

Sponsored