பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்டிய வழக்கு- வைகோ உள்ளிட்ட 83 பேர் விடுதலை!மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்த போது, அனல்மின்நிலைய அடிக்கல் நாட்டுவிழாவிற்காக தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய வழக்கில் கைதான 159 பேரில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ உட்பட 83 பேரை, விடுதலை  செய்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Sponsored


தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இணைந்து 1,000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை தூத்துக்குடியில் இயக்கி வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தின் அடிக்கல்நாட்டு விழா, கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவிற்கு, அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி வருகை புரிந்தார்.

Sponsored


அப்போது, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், பிரணாப் முகர்ஜியை திரும்பிப் போக வலியுறுத்தியும்,  தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பாக,  ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் தொண்டர்கள், பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர். பின்னர்,  கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ம.தி.மு.க., உட்பட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.  இது தவிர, மனித உரிமைக் கழகத்தினர், தூத்துக்குடி வழக்கறிஞர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Sponsored


ஊர்வலம் வி.வி.டி., சிக்னல் அருகில் சென்ற போது, அதில் கலந்து கொண்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைக்கபப்ட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதில், வைகோ உள்ளிட்ட 159 பேர் மீது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வன்முறையைத் தூண்டுதல் ஆகிய பல பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  இந்நிலையில், இவ்வழக்கில் இன்று  தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, வைகோ உள்ளிட்ட 83 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.  Trending Articles

Sponsored