'விடுமுறை நாள்களில் பாடம் நடத்த முடியாது' - போராட்டத்தில் இறங்கிய அரசு ஆசிரியர்கள்



சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார் படுத்தச்சொல்லி ஆசிரியர்களுக்கு கூடுதலான பனிச்சுமையைக் கொடுக்கக் கூடாது என ஈரோட்டில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Sponsored


நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித் துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாக படிக்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

Sponsored


இதற்காக மாவட்ட வாரியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற நீட் பயிற்சியின் போது, அதனை புறக்கணித்த ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

Sponsored


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “சனி, ஞாயிறு விடுமுறையில் தான் அடுத்த வாரம் என்ன பாடம் நடத்த வேண்டுமோ, அதற்கான முன் தயாரிப்புகளை நாங்கள் செய்து வருகிறோம். அப்படியிருக்க, விடுமுறை நாட்களில் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த வகுப்புகளை நடத்தச் சொல்வதால் எங்களுக்கு கூடுதலான பனிச்சுமை ஏற்படும். மேலும், அன்றாட கற்றல் கற்பித்தலிலும் சிக்கல்கள் ஏற்படும்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை போதிக்கத் தான் எங்களை பணி நியமணம் செய்தார்களே தவிர, போட்டித் தேர்விற்காக மாணவர்களைத் தயார்படுத்த அல்ல. பள்ளி வேலை நாட்களில் எந்தப் பயிற்சிகளையும் அளிக்க நாங்க தயாராக இருக்கிறோம். விடுமுறை நாட்களிலும் எங்களை வகுப்புகளை எடுக்கச் சொல்வதால், எங்களுடைய மன நலன் மட்டுமல்லாது குடும்ப நலனும் பாதிக்கப்படுகிறது. இந்தச் சிக்கலை தவிர்க்க, மாவட்ட வாரியாக நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சியளிக்க முதுகலை ஆசிரியர்களை புதிதாக நியமனம் செய்யலாம். அவர்களை அரசின் மற்ற நலத்திட்ட வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றனர்.



Trending Articles

Sponsored