`சேவை எப்பத் தொடங்குமுன்னு தெரியாது'- சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை டென்ஷனாக்கிய அதிகாரிSponsoredசென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று காலையிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளது. சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என எந்தத் தகவலும் மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கவில்லை.

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று காலையிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணிகள் செய்வதறியாமல் திரும்பிச் செல்கின்றனர். மேலும்‌, எப்போது

Sponsored


ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்பது பற்றியும் எவ்விதத் தகவலும் இல்லை. சேவைத் துண்டிக்கப்பட்டது குறித்து எந்தவித அறிவிப்போ அல்லது அறிவிப்புப் பலகையோ வைக்கப்படவில்லை. ரயில் நிலையத்தில் எப்பொழுதும் போல, ரயில்கள் வரும் நேரம் டிஜிட்டல் முறையில் குறிக்கப்பட்டுள்ளது

Sponsored


ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளுக்கு அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளும் வழக்கம்போல் செய்யப்படுகின்றன. ஆனால் எல்லா ரயில்களின் சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளைக் கேட்டபோது, ``தற்போதைக்கு ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. எப்பொழுது ரயில் சேவை தொடரும் என்பது குறித்து எவ்விதத் தகவல்களும் இல்லை'' எனத் தெரிவித்தனர்.Trending Articles

Sponsored