`பக்கத்துல காவிரி ஓடியும் குடிக்கத் தண்ணீர் இல்ல'- குமுறும் கள்ளப்பள்ளி மக்கள்Sponsoredபத்துக் குடங்கள் குடிதண்ணீர் பிடித்து வர தினமும் 50 ரூபாய்க்கு வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டியிருப்பதாகக் கள்ளப்பள்ளி மக்கள் புலம்பி வருகிறார்கள். பெட்ரோல் உயர்வால் நாடே போராடிக்கொண்டிருக்கும் சூழலில், தண்ணீர் தூக்க பெட்ரோல் செலவாவதாகக் கள்ளப்பள்ளி கிராம மக்கள் சொல்லுவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது கள்ளப்பள்ளி. 2000 குடும்பங்கள் வசிக்கும் பெரிய ஊராட்சிகளில் ஒன்று. இந்த கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில்தான் காவிரி ஓடுகிறது. ஆனாலும், இந்த கிராமத்தில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், குடிநீர் பிடிக்க தினமும் 5 கி.மீ தூரத்தில் உள்ள கொடிக்கால்தெருவுக்கு வண்டியில் பெட்ரோல் போட்டுக்கொண்டு போவதாகவும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். தனது மனைவி லட்சுமியோடு வண்டியில் இரண்டு குடம் தண்ணீரைப் பிடித்து வந்த தங்கதுரை என்பவரிடம் பேசினோம்.

Sponsored


Sponsored


``பக்கத்துல காவிரி ஓடியும் பலமாசமா எங்க ஊர்ல தண்ணீர்ப் பிரச்னை இருப்பது கொடுமை. எங்க ஊர்ல ஒண்ணுக்கு ரெண்டா போர்வேல் போட்டு, மேல்நிலைத் தொட்டியெல்லாம் தலா 8 லட்சம் ரூபாயில் கட்டி இருக்காங்க. ஆனால், அவற்றை இயக்கவே இல்லை. இதனால், ஊர் முழுக்க உள்ள பைப்புகளில் இருந்த இரும்பு பைப்புகளை திருடிட்டுப் போயிட்டாங்க. இதனால், நாங்க 5 கி.மீ தூரத்தில் உள்ள கொடிக்கால் தெருவுக்கு தினமும் காலையும் மாலையும் வாகனத்துல போய் தண்ணீர் தூக்கிட்டு வர வேண்டி இருக்கு. ஒரு நடையில் 2 குடம்ன்னு 5 நடை அடிக்கணும். அதுக்கு 50 ரூபாய்க்கு தினமும் பெட்ரோல் போட வேண்டி இருக்கு. நாங்களெல்லாம் கூலி வேலை பார்க்கும் அன்றாடங்காய்ச்சிகள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பகுதியை இப்படிக் குடிதண்ணீர் பிடிக்க போக வண்டிக்கு பெட்ரோல் போட பயன்படுத்த வேண்டிய நிலைமை. இதனால், மத்த செலவுல துண்டு விழுது. மாவட்ட நிர்வாகம் உடனே எங்க ஊர்ல தண்ணீர் கிடைக்க வழி பண்ணணும். இல்லைன்னா போராட்டம் மூலம் ஒருவழி பண்ணிடுவோம்" என்றார் கொதிப்பாக!.Trending Articles

Sponsored