''ஆர்.டி.ஐ. மூலம் அமைச்சர் வேலுமணியின் ஊழலை அம்பலப்படுத்துவோம்!’’- அறப்போர் இயக்கம்   

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்திருப்பதாக அதிர வைத்துள்ளது அறப்போர் இயக்கம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட இந்தத் தகவலின் அடிப்படையில் இந்த ஊழலை மாலை 3 மணிக்கு ஆதாரங்களுடன் அம்பலபடுத்த உள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

Sponsored


இதுகுறித்துப் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அமைச்சர் வேலுமணி எவ்வாறு ஊழல் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது சகோதரரின் நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான நிறுவனங்கள் வேறு சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு தனது செல்வாக்கின் மூலம் ஒப்பந்தம் வழங்கியிருப்பதும் அம்பலமாகியுள்ளது. அதே போன்று பத்து மாநகராட்சிகளில் ``ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தில் அவர் செய்துள்ள ஊழல், உள் கட்டமைப்பு பணிகளின் ஒப்பந்தங்கள் மூலம் அவர் செய்த முறைகேடு போன்றவையும் அம்பலமாகியுள்ளன.

Sponsored


இதனால் லட்சக்கணக்கில் இருந்த அந்த நிறுவனங்களின் வருவாய் பல கோடிகள் உயர்ந்திருப்பது போன்றவை தெரியவந்துள்ளது.  அனைத்துத் தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளோம்" என்றார் .

அமைச்சர் வேலுமணியின் ஊழலை வெளியிட்டதால் பெண் பத்திரிகையாளருக்கும் மேலும் அந்தச் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த தலைமைப் பொறுப்பாசிரியருக்கும் அமைச்சரிடமிருந்து மிரட்டல் வந்ததாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த விவகாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அமைச்சர் வேலுமணியை பதவி விலகக்கோரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored