இ-சிகரெட் விற்பனைக்குத் தடை! அரசாணை வெளியிட்டது தமிழக அரசுSponsoredதமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இ- சிகரெட் எனப்படும், எலக்ட்ரானிக் சிகரெட் பயன்படுத்துவதற்கு, கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு தடைவிதித்தது. இந்தத் தடை செப்டம்பர் மாதம், முதல் அமலுக்கு வரும் எனத் தமிழக அரசு ஏற்கெனவே அறிவிந்திருந்தது. இந்தநிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில்,  ``மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில், டொபாக்கோ பயன்பாட்டுக்கு ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டது.

Sponsored


Sponsored


அதன் நீட்சியாக, தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காவல், கல்வி, சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்கள் மற்றும் அதைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படுகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored