சக்கர நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்த 56 நிமிடங்கள்!- அப்போலோ டாக்டர் சாட்சியம்Sponsoredஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரான மருத்துவர் ராஜ்பிரசன்னா, ``அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது 59 நாள்களில் 120 முறை அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்தது குறித்த சர்ச்சை இன்றுவரை நீடித்துவரும் நிலையில், அதுகுறித்து தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ள ராஜ் பிரசன்னா, ``நவம்பர் 9-ம் தேதி முதல் 13 -ம் தேதி வரையிலான பிசியோதெரபி சிகிச்சையின்போது ஒருநாள் மட்டும் 56 நிமிடங்கள் ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்தார்’’ என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஜெயலலிதாவுக்குக் கை, கால்கள் மற்றும் மார்பகப் பகுதிகளில் பிசியோதெரபி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். 

இன்று ஆஜரான மற்றொரு மருத்துவரான விக்னேஷிடம் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. `தீவிர சிகிச்சைக் காலங்களில், ஜெயலலிதாவுக்கு எப்போதெல்லாம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது’ என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அதற்கு விக்னேஷ், ``7.10.2016-க்குப் பிறகு தேவைப்படும்போது இரவு நேரங்களில் மட்டும் 5 மணி நேரம் வரையில் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டது’’ என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். ‘செயற்கை சுவாசம் அளிக்காமலேயே இயல்பாக மூச்சுவிடும் நிலைக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக’ ஏற்கெனவே, அப்போலோ மருத்துவர்கள் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது!

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored