`சி.எஸ்.கே அணியின் டிக்கெட் வடிவில் திருமண அழைப்பிதழ்’- அசத்திய ரசிகர்!Sponsoredசென்னை சூப்பர் கிங்கஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர், தனது திருமண அழைப்பிதழை, அந்த அணியின் டிக்கெட் வடிவில் அச்சடித்து  கவனம் ஈர்த்திருக்கிறார்.

`கே.வினோத் வெட்ஸ் சாதனா. மேட்ச் ஆன் செப்டம்பர் 12. என்ட்ரி ஃப்ரீ. ஜி.எஸ்.டி யுவர் ப்ளசிங்’. இது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவரின் திருமண அழைப்பிதழ். அவர் கேப்டன் தோனியின் ரசிகரும்கூட. இப்படியாகத்தான் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது அவரின் திருமண அழைப்பிதழ். இதை வாங்கிப் படிப்பவர்கள், ஒருநிமிடம் இது திருமண அழைப்பிதழா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐபிஎல் போட்டியின் டிக்கெட்டா எனத் திகைக்கும் அளவுக்குக் கவனத்தை ஈர்த்துள்ளது அந்த அழைப்பிதழ். ரசிகரின் வித்தியாச முயற்சி குறித்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவருக்கு சி.எஸ்.கே சார்பில் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


அழைப்பிதழ் வடிவமைப்பு சி.எஸ்.கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. சி.எஸ்.கே ரசிகர்கள், வினோத்துக்கு, தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வித்தியாசமான அழைப்பிதழ் குறித்து விவரிக்கும் வினோத்,``தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகன் நான். எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சிட விரும்பினேன். இதுகுறித்து கிராஃபிக் டிசைனரான எனது நண்பரிடம் பேசினேன். அவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான். இருவரும் இந்த அழைப்பிதழை வடிவமைத்தோம்’’ என்றார். மேலும், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது கேப்டன் தோனி கையெழுத்திட்ட பேட் தனக்குப் பரிசாக வழங்கப்பட்டது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.Trending Articles

Sponsored