முதல்வரின் மகனுக்கு டெண்டர் வழங்குவதில் என்ன தவறு? - அரசு தலைமை வழக்கறிஞர் கேள்விSponsoredமுதல்வரின் மகனுக்கு அரசு டெண்டர் வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது என அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வருக்கு எதிரான புகார் குறித்து நடைபெற்று வரும் விசாரணை அறிக்கையை அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Sponsored


இதையடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது 4 முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தி.மு.க தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1991-ல் இருந்து எஸ்.பி.கே நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க ஆட்சியிலும் அவர்களுக்குதான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் மகன் என்பதால் அரசு ஒப்பந்தம் பெற தகுதியில்லையா என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன் கேள்வி எழுப்பினார். மேலும், முதல்வர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா என லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாகக் கூற முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை செப்டம்பர் 17-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.

Sponsored
Trending Articles

Sponsored