``கமிஷனர் வாழ்க்கை கொடுத்தார்... சூர்யா அதைத் தவறவிட்டுட்டான்” - வருந்தும் அண்ணாநகர் வாசிகள்!



Sponsored



சென்னை அண்ணா நகர், சிந்தாமணியைச் சேர்ந்த மருத்துவர் அமுதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனை விரட்டிப்பிடித்து வீரதீர செயல்புரிந்த சூர்யாவை எளிதில் மறந்திருக்க மாட்டோம். சூர்யாவின் துணிச்சலைப் பாராட்டி, சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், பரிசுத்தொகையும் காவல்துறை அவரைத் தத்தெடுப்பதாகவும் அறிவித்திருந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவுக்குத் தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையும் வாங்கிக்கொடுத்திருந்தார். தமிழக மக்களும் கமிஷனரின் இந்தச் செயலைப் பாராட்டினார்கள். சரி, சூர்யா இப்போது எப்படி இருக்கிறார். அவர் வேலை எப்படிப் போகிறது?

இதைத் தெரிந்துகொள்ள, அவர் வேலை செய்யும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டால், அதிர்ச்சி பதில் கிடைத்தது. சூர்யா வேலையிலிருந்து நின்றுவிட்டாராம். நேரடியாக அவர் வீடு இருக்கும் பகுதிக்குச் சென்று விசாரித்தோம்.

Sponsored


``தம்பி, அந்தப் பையனை பெருமையா நினைச்சோம். ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம். அதனால், கமிஷனர் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனால், ரெண்டு மாசம் வேலைக்குப் போனவன், கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும், பசங்களோடு சேர்ந்து வீணா செலவழிச்சுட்டான். `ஏண்டா இப்படிப் பண்றே?'னு கேட்ட அவன் பாட்டிக்கிட்ட சண்டை போட்டுட்டு வீட்டுக்கு வராமல் இருந்தான். நாங்க எவ்வளவோ சொல்லியும் காது கொடுத்து கேட்கலை. கஷ்டப்பட்ட பையனுக்கு கமிஷனர் வாழ்க்கை கொடுத்தார். அதைத் தவறவிட்டுட்டான். நீங்களாவது நாலு நல்ல வார்த்தை சொல்லி திருத்துங்க தம்பி” என்றார் ஒருவர்.

Sponsored


தெரு முனையில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த சூர்யாவிடம் பேச்சு கொடுத்தோம். ``சார், உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இப்போ என்னைத் தேடிவந்தீங்க? சும்மா சும்மா இங்கே வராதீங்க. நான் கஷ்டப்படும்போது வந்திருந்தீங்க. அதை நினைச்சுப் பார்த்துதான் இப்போ நின்னு பதில் சொல்லிட்டிருக்கேன். எனக்கு அந்த வேலை பிடிக்கலை. அதனால நின்னுட்டேன் போதுமா” எனக் கடுகடுத்தார். 



Trending Articles

Sponsored