``மு.க.ஸ்டாலினுக்கு பாரத ரத்னாதான் முக்கியம்; பாரத் பந்த் அல்ல!" - தம்பிதுரை விமர்சனம்Sponsoredதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ``பாரத ரத்னாதான் முக்கியம்; பாரத் பந்த் அல்ல” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

 

மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதி எம்.பி-யுமான தம்பிதுரை அடுத்த வருடம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த வகையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில், இன்று மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி அதிரடியாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு காரணம், இப்போதைய மத்திய அரசும் முந்தைய மத்திய அரசும்தான். வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி பண்ணுகிறார்கள். அவற்றின் விலை குறைவாக இருக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும்  உரிமையைத் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.

Sponsored


அதோடு, இறக்குமதி செய்யப்படும், கச்சா எண்ணெய்க்கு செஸ் வரி, ஜி.எஸ்.டி வரின்னு ஏகப்பட்ட வரிகளை மத்திய அரசு விதிக்குது. இதனால், தனியார் கம்பெனிகள் பெட்ரோல், டீசல் விலையை இஷ்டத்துக்கு உயர்த்திடுறாங்க. ஆனால், 'பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணம் மாநில அரசுகளே'ன்னு பழியைத் தூக்கி மாநில அரசுகள் மீது போடுது மத்திய அரசு. ஆனால், உண்மையில் பெட்ரோல், டீசல் உயர்வுக்கும் மாநில அரசுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வரிவிதிப்புகளால், மத்திய அரசுக்குதான் பெட்ரோல், டீசல் உயர்வால்  லாபம். பெட்ரோல், டீசல் உயர்வை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் ஆதரிச்சதில்லை. இப்போ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க அரசும் அதை ஆதரிக்கவில்லை.

Sponsored


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க அரசோடு உறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறார். அவருக்கு பா.ஜ.க அரசை, எதிர்க்கத் திராணி இல்லை. அ.தி.மு.க அரசுக்கு எதிராக முன்னர் தி.மு.க போராட்டம் நடத்தினால், அங்கங்கே பேருந்துகளை உடைப்பார்கள். மறியல் செய்வார்கள். ரயிலை மறிப்பார்கள். ஸ்டாலினும் தெருவில் உட்கார்ந்து போராட்டம் பண்ணி, அரெஸ்ட் ஆவார். ஆனால், சமீபத்தில் பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நடந்த பாரத் பந்த்தில் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஸ்டாலின் கடமைக்கு அறிக்கைவிட்டார். அதுக்கு காரணம், பா.ஜ.க அரசால், அவரின் தந்தைக்கு கிடைக்கும் பாரத ரத்னாவுக்காகத்தான். அதனால், அவருக்கு பாரத் பந்த் முக்கியமாகப்படவில்லை" என்றார். Trending Articles

Sponsored