`குழந்தைகளை அழ வைத்து வீடியோக்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம்' - கொதிக்கும் குழந்தைகள் நல ஆர்வலர்கள்Sponsored'சேட்டை பண்ணினா அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது. குணமா வாயால் சொல்லணும்' - இப்படி சின்னஞ்சிறு சிறுமி தன் அம்மாவிடம் பேசும் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங். இது போன்று குழந்தைகள் அழுவதும் பெற்றோர்கள் கண்டிப்பதுமான  வீடியோக்கள் அடிக்கடி வெளிவருவதுண்டு. குழந்தைகளின் வீட்டில் உள்ளவர்களே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விடுகிறார்கள். அல்லது அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் எடுத்து பதிவிடுகிறார்கள்.

ஆனால், `இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் ' என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்.

Sponsored


"குழந்தைகள் அழுவது போன்ற வீடியோக்களைப் பதிவிடுவது சட்டப்படி குற்றம். உளவியல் ரீதியாக இது குழந்தைகளைப் பாதிக்கும். சில வீடுகளில் பெற்றோர்கள் பதிவிடுகிறார்கள். சில இடங்களில் குழந்தைகள் துன்புறுவதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீடியோ எடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறோம் என்கிற நல்லெண்ணத்தில் பதிவிடுகிறார்கள். ஆனால், அதுவுமே, சட்டப்படி தவறுதான். குழந்தைகளைக் காப்பாற்ற நினைப்பவர்கள் முறையாகக் குழந்தைகள் நல ஆணையத்தில்தான் புகார் செய்ய வேண்டும். 

Sponsored


குழந்தைகள் அழுவதை சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்து பதிவிடுவது என்பது குரூரமான ஆபத்தான ஒரு மனநிலை. அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளின் மீதான அக்கறையும் கரிசனமும் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. இதுபோன்ற வீடியோக்களை தற்போது சேகரித்து வருகிறோம். மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு  ஆணையத்தில் புகார் செய்திருக்கிறோம். சமூக வலைதளங்களைக் கண்காணிக்க ஓர் அமைப்பை உருவாக்க  வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்" என்கிறார் அவர்.Trending Articles

Sponsored