குடியரசுத் தலைவருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!Sponsoredபயிர்க்கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கேரள வேளாண்துறை அமைச்சர் வி.ஏ. சுனில் ஆகியோர் இன்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Sponsored


இதையடுத்து, திருச்சி சிவா தலைமையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை விவசாயிகள் சந்தித்தனர். அப்போது, விவசாயக் கடனைத் தள்ளுபடிசெய்ய ஜெட்லியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராஜா மோகன் சிங்கை விவசாயிகள் சந்தித்தனர்.
மேலும், விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனுவை, மக்களந்த் துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமரிடம் வழங்கினார். 

Sponsored


இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, தமிழக விவசாயிகள் சந்தித்தனர்.  இந்தச் சந்திப்பின்போது, விவசாயிகளுடன் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனும் உடன் இருந்தார். Trending Articles

Sponsored