தொடங்கியது இன்ஜினீயரிங் படிப்புக்கான பொறியியல் கலந்தாய்வுSponsoredபொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இன்றும் (17.07.2017), நாளையும் வெக்கேஷனல் (தொழிற்பாடம்) படிப்பில் படித்தவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 


மாணவர்களுக்கான அழைப்புக் கடிதத்தை https://www.tnea.ac.in/ என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரியையும், கடவுச்சொல்லையும் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். கலந்தாய்வில் கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நேரத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு கலந்தாய்வுக்கூடத்துக்கு வருகையைப் பதிவுசெய்ய வேண்டும். 

Sponsored


Sponsoredமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக ஜூலை 19, 20-ம் தேதியில் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 23-ம் தேதி பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் காலியிடங்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன்  https://www.tnea.ac.in/ என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

"கலந்தாய்வுக்காக வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படியே செயல்படும். கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கிச் செல்லலாம் என்றும், இதற்கான வசதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்" தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.Trending Articles

Sponsored