நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை: 2 நாள் சாலை வழி பயணத்திற்கு தடை!Sponsoredபிரதமர் நரேந்திர மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு இரு தினங்களுக்கு வெளியூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாலை வழியாக  வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.
ராமேஸ்வரம் அருகே  உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்தினை அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்சியில் பிரதமருடன், மத்திய அமைச்சர்கள்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் அதே நாளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி ராமர்தீர்தம் தபசு மண்டபகப்படியில் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருக்கோயிலின் நடை சாத்தப்படவும் உள்ளது. 

Sponsored


எனவே, மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளையும் முன்னிட்டு வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை மார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கோ அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கோ செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored