அப்துல்கலாம் நினைவிட சிறப்பு அஞ்சல் உறை வெளியீடுSponsoredமுன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் தேசிய நினைவிடத்தைப் போற்றும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் அவரது 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

பாரம்பர்ய மிக்க நினைவுச் சின்னங்கள், நிறுவனங்களின் வெள்ளிவிழா, பொன்விழா, நூற்றாண்டு விழா போன்ற நிகழ்வுகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் சிறப்பு அஞ்சல் முத்திரையும் வெளியிடப்படுகிறது.

Sponsored


Sponsored


இதன்படி கடந்தாண்டு மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் நினைவாக அஞ்சல்தலை, அஞ்சல் உறை, அஞ்சல் முத்திரை ஆகியவை  வெளியிடப்பட்டன. இதேபோல் டாக்டர் அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளில் திறக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அவரது நினைவிடத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையினை தென்மண்டல அஞ்சல்துறை தலைவர் சாரதா சம்பத் வெளியிட்டார்.  ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்புவில் இன்று திறக்கப்பட்ட அப்துல்கலாம் தேசிய நினைவகம் அருகே நடந்த விழாவில் வெளியிடப்பட்ட இந்தச் சிறப்பு அஞ்சல் உறையினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை பொறியாளர் டாக்டர் அஜய் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில், தென்மண்டல அஞ்சல்துறை இயக்குநர் பவன்குமார் சிங், கலாமின் பேரன்கள் சேக், சலீம் மற்றும் ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரு முறை மட்டுமே வெளியிடப்படும் இந்த அரிய அஞ்சல் உறையினை அஞ்சல் தலை சேகரிப்பாளர்களும், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களும் வாங்கிப் பாதுகாக்குமாறு அஞ்சல்துறை தலைவர் சாரதா சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.Trending Articles

Sponsored